சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. இதனால் பலனடைய போகும் 4 ராசிகள் இவைதான்.
சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே 1ஆம் திகதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். குரு பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வையாலும் குரு பயணம் செய்வதை பொருத்தும் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். தொழில் குரு, வியாபாரத்தில் வெற்றிகளை தேடித்தரப்போகிறார். வேலை, தொழிலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். இந்த கால கட்டத்தில் புதிய தொழில் தொடங்காதீர்கள். பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். கன்னி: உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குரு பார்வை உங்களுக்கு கிடைப்பதால் குரு பலன் வந்து விட்டது. அற்புதமான யோக கால கட்டம். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்ற சொல்வார்கள். ஒன்பதாம் இட குரு நிறைய லாபத்தையும் நன்மைகளையும் தருவார். உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் இருந்தும் வரப்போகிறது. துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரப்போகிறது. குருவின் பயணம், பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. குரு பார்வை 12,2,4ஆம் வீடுகளின் மீது விழுவதால் பண வருமானமும் அதனால் சுப செலவுகளும் அதிகரிக்கும். குரு பகவான் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகினாலும் கவலை வேண்டாம் உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானமும் வெற்றியும் தேடி வரப்போகிறது. விருச்சிகம்: குரு பகவான் வரும் மே மாதம் முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுவார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அதிக பண வருமானம் வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். நல்ல வாழ்க்கை துணை தேடி வரும். வேலையை இழந்து தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற நல்ல புரமோஷனும் கிடைக்கும்.
Leave Comments